Friday 12 July 2013

சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி



நினைத்துப் பார்க்கிற யாவுமே உயிரின் வேரை நனைத்துப் பார்க்கத்தான் செய்யும் .

என் பள்ளி நாட்கள் இனிமையானவை ,இலையை, உயர மலையை ,கவின் கலையை ,கடல் அலையை ,அழகு சிலையை ரசித்த நந்தவன நாட்கள் பாளை .தூய சவேரியார் பள்ளியில் பயின்ற நாட்கள் .
உண்டதைச் செரித்து ,கண்டதை  ரசித்து ,கற்றதை நினைத்து களித்த நாட்கள் பள்ளி நாட்கள் நினைத்துப் பார்க்க இனியன .
கலை வார விழாவை நடத்தி நாய் குட்டி வளர்ப்பு முதல் கவிதை எழுதுதல் வரை 300திறன்களுக்கு பரிசளித்த பள்ளி என்  பாளை .தூய சவேரியார் பள்ளி.
கனல் பத்திரிக்கையில் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே எழுத வைத்த அருட்தந்தையர்கள் 
வாசிக்க நிறைய நூல்களைத் தந்து உதவிய நெல்லை மாவட்ட மத்திய நூலகம் . தமிழ் இலக்கியத்தை முறையாகக் கற்றுத் தந்த என் அருமைத் தந்தையார் தமிழாசிரியர் ம .சௌந்தர ராஜன் அவர்கள் . புதிய உலகில் புடம் போட வைத்த பள்ளி நாட்கள் .
சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய் பாளை .தூய சவேரியார் கல்லூரியின் வேதியல் மாணவனாகப்  பயின்ற நாட்கள்
கம்பனையும் தேம்பாவணியயும் மகாகவிபாரதியையும் கீதாஞ்சலியையும்பயின்ற நந்தவன நாட்கள் 
கல்லூரியில் படிக்கும் போது பாரதப் பிரதமரின் தேசிய சத்பாவனா விருதினை புது டெல்லி விக்யான் பவனில் 12.1.1994 ஆம் ஆண்டு திரு .பி .வி .நரசிம்மராவ் அவர்களிடம் பெற்றதும் 
"புதுக்கவிதைகளில் சமுதாய நோக்கு" என்ற தலைப்பில் பி .எஸ் .சி .முன்றாம் ஆண்டு பயின்ற போது திறனாய்வுக் கட்டுரை எழுதி தஞ்சையில் தமிழக அரசு நடத்திய எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்களிடம் விருது பெற்றதும் இன்றும் மலரும் நினைவுகள் .

இந்த நினைவுகளை நிறுத்திப் பார்க்க வைத்தது இன்று காலை பங்கேற்ற சூரியன் பண்பலை நடத்திய நேர்காணல் .வண்ணார்பேட்டை சூரியன் பண்பலை அலுவலகம் பொது மேலாளர் திரு .சங்கரசுப்பு எப்போதும் போல் உற்சாகமாகப் பேசினார் .
நிகழ்ச்சி ஏற்பாடு சன் தொலைக்காட்சி அரட்டை அரங்கத்தில் கலக்கும் பெரிய தம்பி பிச்சுமணி .
மென்மையான குரலால் கட்டிப் போடும் வள்ளி மணாளன் அழகாக வினாக்களைத் தொடுத்தார்
மனம் ஓரிரு வினாடிகளில் இருபது வருடங்கள் பின் நோக்கிப் பயணித்தது .
"பிரபலங்களின் வெற்றிப்படிக்கட்டுகள்  "எனும் நிகழ்ச்சியாக 13.7.2013 சனிக்கிழமை இரவு 10மணிக்கு நெல்லை சூரியன் பண்பலையில் ஒளிபரப்பாகிறது .
நினைவுகளின் படிக்கட்டுகளில்இன்னமும்  நிற்கிறது மனம் .


சௌந்தர மகாதேவன் ,திருநெல்வேலி 

No comments:

Post a Comment